லாரியை 'முந்த' முயன்றபோது.... 'நொடியில்' நேர்ந்த விபரீதம்... சம்பவ இடத்திலேயே 'பலியான' வாலிபர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 26, 2020 02:21 PM

லாரியை முந்த முயன்றபோது நேர்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Two Youth died Bike Accident Near Hosur, Police Investigate

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி டிரைவர்கள் சாப்பிட செல்வது உள்ளிட்ட காரணங்களுக்காக, லாரிகளை நிறுத்தி வைப்பது வழக்கம். அதேபோல இன்றும் அப்பகுதியில் டிரைவர்கள் லாரியை நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள், முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் இறந்த ஒரு வாலிபர் பெயர் திருமூர்த்தி(27) என்பதும் அவர் பெங்களூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இன்னொரு வாலிபர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. அவர் யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.