'அருகருகே சென்றபோது'... 'திடீரென்று திரும்பியதால்'... 'நடந்த சோகம்'... 'பதற' வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 12, 2020 06:40 PM

கோவையில் இருசக்கர வாகனம் ஒன்று பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் சென்று விபத்துக்குள்ளானதில், ஹெல்மெட் அணிந்து சென்றதால் இளைஞர்கள் இருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

CCTV VIDEO: Coimbatore Government Bus, Bike Accident

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்குள் நுழைவதற்காக, கிராஸ்கட் சாலையிலிருந்து பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அதன் அருகே இருசக்கர வாகனமும் வந்து கொண்டிருந்தது. பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழைய முற்பட்டபோது, அருகே வந்த இருசக்கர வாகனமானது பேருந்தின் சக்கரத்தில் கீழ் மாட்டி தரதரவென சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் சகபயணிகள் பதறியபடியே இறங்கி விபத்துக்குள்ளான இருவரையும் மீட்டனர். இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தாலும் ஓட்டுனரின் சாமார்த்தியமாக பேருந்தை நிறுத்தியதாலும், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கடந்த 8-ஆம் தேதி நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Tags : #ACCIDENT