திருமண ‘அழைப்பிதழ்’ கொடுக்கச் சென்ற.. ‘மாப்பிள்ளைக்கு’ நேர்ந்த ‘துயரம்’... ‘கதறியழுத’ உறவினர்கள்... மனதை ‘உலுக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 05, 2020 12:01 AM

மேல்மருவத்தூர் அருகே தன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற மாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chengalpattu Man Dies In Accident While Giving Wedding Invitation

விழுப்புரம் மாவட்டம் மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயனார். அவர் திருப்போரூர் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்துள்ளது.  இதையடுத்து திருமண வேலைகளில் ஈடுபட்டு வந்த ஐயனார் இன்று அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக திண்டிவனத்திலிருந்து மதுராந்தகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது சிறுநாகலூர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஐயனார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த ஐயனாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறியழுத காட்சி பார்த்தவர்கள் மனதை உலுக்கியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #MARRIAGE #GROOM #INVITATION