‘எந்திரத்துக்குள் தலை சிக்கி’... வேலை நேரத்தில் இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்.. பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 05, 2020 11:26 AM

உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட புல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞருக்கு நேர்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

North indian youth dead in machinery accident near uthiramerur

மேற்கூறிய சிமெண்ட் கற்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் 25 வயதான வடமாநில இளைஞர் நிகாபிரதான். இவர் இந்த நிறுவனத்தில் எந்திர ஆபரேட்டராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று காலை எந்திரத்தை இயக்கிய போது எதிர்பாராதவிதமாக அவரது தலை எந்திரத்தில் சிக்கி கொண்டது.

இதனால் அவரது தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிகாபிரதானின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.

Tags : #ACCIDENT #MACHINE