அதிவேகத்தில் சென்றப் பேருந்து... மின்கம்பத்தில் இடித்து.. பள்ளத்தில் கவிழ்ந்து நிகழ்ந்த கோரம்... 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Feb 04, 2020 10:14 PM

அதிவேகத்தில் சென்றப் பேருந்து மின்கம்பத்தில் இடித்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 Killed, 30 Injured after Bus Falls into Assam\'s Goalpara

அசாம் மாநிலம், துபிரி பகுதியில் இருந்து கவுகாத்தி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 36 பேர் பயணம் செய்தனர்.  கோல்பூரா மாவட்டம் டுஹுப்ஹாரா என்ற பகுதியை அதிவேகத்தில் கடந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் அருகே இருந்த மின்கம்பம் மீது பயங்கர வேகத்தில் மோதியது. பின்னர் அதன் அருகே இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கித் தவித்த 30 பேரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே கோல்பரா பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : #ACCIDENT #ASSAM #BUS #PASSENGERS #KILLED #DIED