'தாறுமாறாக ஓடிய வேன்... வேலைக்கு போன போது... தொழிலாளிக்கு நடந்த சோகம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 11, 2020 09:09 AM

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரம் வேன் கவிழ்ந்ததில் தனியார் கம்பெனி ஊழியர் பலியாகியுள்ளார்.

employee killed in road accident near sriperumbudur

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் தங்கி, அமரம்பேடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை தாமோதரன் வழக்கம்போல கம்பெனி வேனில் ஊழியர்களுடன் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, வேன் குன்றத்தூர் சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த தாமோதரன் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 5 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : #ACCIDENT #VAN #EMPLOYEE