‘நேருக்குநேர்’ மோதிய பைக்குகள்.. காரை விட்டு இறங்கி காயமடைந்தவர்கள மீட்ட அமைச்சர்.. குவியும் பாராட்டுகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 05, 2020 12:21 PM

கோவை அருகே சாலை விபத்தில் சிக்கிய நபர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Minister SP Velumani rescued 2 people from road accident

கோவை மாவட்டம் போடிப்பாளையம் அருகே நேற்றிரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் போடிப்பாளையத்தை சேர்ந்த பூபாலன் மற்றும் பச்சப்பாளையத்தை சேர்ந்த தங்கவேலு என்பவரும் காயமடைந்தனர். அப்போது போடிப்பளையத்தில் இருந்து மதுக்கரை நோக்கி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காரில் சென்றுகொண்டு இருந்துள்ளார்.

இருசக்கர வாகன விபத்தில் சி்க்கி இருவர் சாலையில் கிடந்ததைப் பார்த்த அமைச்சர் உடனே காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கியுள்ளார். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பி வைத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். உரிய நேரத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Tags : #ACCIDENT #COIMBATORE #MINISTER #SPVELUMANI