இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > உலகம்1. டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி ஊர்வலத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கி சூட்டில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார்.

2. ஒருநாள் தொடரில் மோசமான ஸ்கோர்களில் ஆட்டமிழந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற மோசமான சாதனையை கோலி படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளில் 51, 15, 9 என மொத்தமாகவே கோலி 75 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
3. நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்து வருகிறோம் என அவருடைய தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
4. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,113 ஆக உயர்ந்துள்ளது.
5. எனது இந்திய சுற்றுப் பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் என்னை வரவேற்பார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
6. காரைக்கால் மாவட்டத்தையும், புதுச்சேரியில் பாகூரையும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
7. ஜப்பான் சொகுசுக் கப்பலில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்தக் கப்பலில் மொத்தமாக இதுவரை 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
8. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
9. ஸ்ரீபெரும்புதூரில் ரூ 4000 கோடி மதிப்பீட்டில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
10. 2 மாதங்களில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக் (FasTag) கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்பட உள்ளது.
11. அம்பாசமுத்திரம் அருகே செவிலியரை வன்கொடுமை செய்து கொலை செய்த ராஜேஷ், வசந்த் எனும் 2 பேருக்கு நெல்லை மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
12. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
13. மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கு இனி வாரம் 5 நாட்களே வேலை எனும் புதிய நடைமுறை வரும் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
