‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியவர்களுக்கு.. வீட்டு ‘வாசலில்’ நேர்ந்த ‘பயங்கரம்’... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 05, 2020 04:04 PM

சேலத்தில் இருசக்கர வாகனங்கள்மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

Accident CCTV Video Woman Injured As Car Rams Into Parked Bikes

சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் கடந்த 2ஆம் தேதி மனைவி தவமணி மற்றும் மகளுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்தவர் வாசலில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடியே, அருகில் இருசக்கர வாகனத்தில் இருந்த மற்றொரு நபருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது பின்னால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த கார் ஒன்று 2 இருசக்கர வாகனங்கள் மீதும் மோத, காரின் சக்கரத்தில் தவமணி சிக்கிக்கொண்டுள்ளார். இதையடுத்து காலில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் விரைந்து  மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் மற்ற 2 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

மேலும் காரை ஓட்டிவந்த அரசு ஊழியரான கமலக்கண்ணன் என்பவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதறவைக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Tags : #ACCIDENT #CCTV #SALEM #MARRIAGE #VIDEO #COUPLE #GIRL