'கை, கால கட்டிப்போட்டு... 3 மணி நேரம் காட்டுத்தனமா'... 'உலக அரங்கில்'... 'இந்தியா'வுக்கு பெருமை சேர்த்த 'பெண்மணி'... 'கண்ணீர்' மல்க கதறிய கொடூரம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Feb 21, 2020 05:11 PM

இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி கேப்டன் சூரஜ் லதா தேவியை, அவரது கணவர் 3 மணி நேரம்  கொடூரமாகத் தாக்கியதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

former indian women hockey team captain tortured by husband

2002ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி லதா தேவி தலைமையில் 3 தங்கப்பதக்கம் வென்றது. இதைத் தொடர்ந்து, 2005ம் ஆண்டு இவர் கே.எஸ்.சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சூரஜ் லதா தேவியின் கணவர் சாந்தகுமார், மேற்கு மும்பை ரயில்வேயின் முன்னாள் ஊழியர் ஆவார். கடந்த நவம்பர் மாதம், சாந்த குமார் மதுப்போதையில் லதா தேவியின் கை கால்களை கட்டி 3 மணி நேரமாக தாக்கி உள்ளார். இதனால், அவரது உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர் தனது கணவர் தன்னை கொடூரமாக தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக வரதட்சனை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திருமணம் செய்து கொண்டது முதல் இவரது கணவரால் மனஉளைச்சல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சுல்தான்பூர் லோதி காவல் நிலைய அதிகாரிகள் லதாவின் கணவர் சாந்தகுமார் சிங் மீது தற்போது வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #POLICE #WOMEN #HOCKEY #HUSBAND