VIDEO: ‘அண்ணே அந்த சேலைய காட்டுங்க’!.. ‘கட்டைப் பையுடன் வந்த பெண்கள் செய்த காரியம்’.. சிசிடிவி வீடியோ பார்த்து ஷாக்கான ஓனர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 20, 2020 11:46 AM

சிவகங்கை அருகே துணிக்கடையில் பல மாதங்களாக திருடி வந்த இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Sivagangai two women steal in textile shop caught on CCTV camera

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள கல்லல் பகுதியை சேர்ந்த புகழ் என்பவர் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஒருநாள் எதர்ச்சையாக கடைசியின் சிசிடிவி கேமராக பதிவுகளை ஆராய்ந்துள்ளார். அப்போது இரண்டு பெண்கள் துணி எடுப்பதுபோல் வந்து ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி விலை உயரந்த துணிகளை திருடிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை அடுத்து அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து பார்த்துள்ளார். அப்போது பல தடவை கடைக்கு வந்த அப்பெண்கள் துணி எடுப்பதுப்போல் நடித்து விலை உயர்ந்த துணிகளை திருடுச் சென்றது தெரியவந்துள்ளது. உடனே கடையின் உரிமையாளர் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் துணிக்கடையில் திருடிய இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

News Credits: Polimer News

Tags : #ROBBERY #CCTV #SIVAGANGAI #WOMEN