'7-வது கட்டளையை மீறிவிட்டேன்' என்னை மன்னித்து விடுங்கள்... வீட்டின் வெளியே 'எழுதிவைத்து' சென்ற திருடன்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 20, 2020 01:03 PM

என்னை மன்னித்து விடுங்கள் என வீட்டிற்கு வெளியே திருடன் எழுதிவைத்து விட்டு சென்ற செய்தி வைரலாகி வருகிறது.

Thief pens apology note after mistakenly targeting retired Army office

கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள திருவாங்குளம் பகுதியை சேர்ந்த கடைகளில் திருடிய திருடன் அந்த பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் வீட்டில் திருடவில்லை. இதைவிட வீட்டிற்கு வெளியில் அந்த திருடன் எழுதிவைத்து விட்டு சென்றது தான் ஹைலைட்.

அதில், ''இது ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் நுழைந்து விட்டேன். கடைசி நேரத்தில் தான் இது ராணுவ வீரர் வீடு என்பது எனக்கு தெரியவந்தது. ராணுவ வீரரின் தொப்பியை வைத்து தான் இது ராணுவ வீரரின் வீடு என்பதையே நான் கண்டுபிடித்தேன். தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். பைபிளில் 7-வது கட்டளையை மீறி விட்டேன். ராணுவ அதிகாரி அவர்களே என்னை மன்னித்து விடுங்கள்" என இருந்தது.

கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்திய போது இந்த விவரம் தெரிய வந்துள்ளது. தற்போது அந்த விசித்திர திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.