கையில் 'துப்பாக்கி'யுடன்... தடாலடியாக நுழைந்த 'முகமூடி கொள்ளையன்'... 'ஜேம்ஸ் பாண்ட்' பாணியில் மாஸ் காட்டிய போலீஸ் தம்பதி!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் பணம் கேட்டு மிரட்டிய நபரை, அங்கு உணவருந்திக் கொண்டிருந்த போலீஸ் தம்பதி துரத்தி பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர், கடைக்காரரிடம் துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது, உணவகத்தில் போலீஸ் தம்பதியினர் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், முகமூடி கொள்ளைக்காரனை பார்த்த அந்த தம்பதி, அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு, அந்த கொள்ளையனை பிடிக்க முயன்றுள்ளனர். இதை கொள்ளையன் பார்த்திடவே, உணகத்தில் இருந்து தப்பித்து ஓடியுள்ளான். இதைத் தொடர்ந்து, அந்த போலீஸ் தம்பதியினரும் கொள்ளையனை துரத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும், இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
