‘உதவி’ கேட்ட இளைஞர்... ‘பின்தொடர்ந்து’ வந்த ‘நண்பர்கள்’... நம்பி ‘லிஃப்ட்’ கொடுத்த பெண்ணுக்கு ‘கடைசியில்’ நேர்ந்த ‘கொடூரம்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாவிஜயவாடாவில் பெண் ஒருவர் 3 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய அந்தப் பெண்ணிடம் இளைஞர் ஒருவர் லிஃப்ட் கேட்டுள்ளார். தன் பெயர் சைதன்யா என அறிமுகம் செய்துகொண்ட அந்த நபர் ஐடிஐ படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் தனக்கு உதவ முடியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணும் தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகக் கூறி செல்போன் எண்ணைக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அடுத்த நாள் காலை அந்தப் பெண்ணிற்கு கால் செய்த சைதன்யா வேலை தொடர்பாகவும், சான்றிதழ்கள் தொடர்பாகவும் பேச வேண்டும் சந்திக்க முடியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணும் வேலை முடிந்த பிறகு சந்திப்பதாகக் கூறியுள்ளார். பின்னர் இரவு 8 மணியளவில் அந்தப் பெண் லெனின் செண்டர் பகுதியில் வைத்து சைதன்யாவை சந்தித்தபோது, தன் நண்பர்கள் என 2 இளைஞர்களை அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அதன்பிறகு சைதன்யா அந்தப் பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் செல்ல, அவருடைய நண்பர்கள் ஆட்டோவில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற அந்த இளைஞர்கள் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ந்துபோன அந்தப் பெண் பின்னர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த 3 இளைஞர்களும் அடையாளம் காணப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறியுள்ளனர்.
