‘ஏன்னா இது வாலிப வயசு!’ .. ‘பெண் காவலரை’ வீடியோ எடுத்த வாலிபர்.. ‘அதுக்கு அப்புறம்’ செய்த அதிர்ச்சி காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 19, 2020 12:46 PM

திருச்சி அருகே பெண் காவலரை வீடியோ எடுத்தது மட்டுமில்லாமல், அதை வைத்து டிக்டாக் செய்து வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

man arrested for filming a police woman and posted in tiktok

திருச்சி அருகே உள்ளது லால்குடி கீழ வீதி மகா மாரியம்மன் கோவில். இங்கு பூச்சொரிதல் விழாவும், இதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியும் விமரிசையாக நடந்துவந்த நிலையில், இந்த விழாவின், பாதுகாப்பு பணிக்காக சமயபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

இங்கு ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ஒரு வாலிபர், பணி முடிந்து நடந்துசென்றுகொண்டிருந்த பெண் காவலரை  தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுத்தது மட்டுமில்லாமல் அதை வைத்து டிக்டாக் வீடியோ செய்தும் பதிவிட்டுள்ளார். இதனை அறிந்த அந்த பெண் காவலர் லால்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனை அடுத்து அந்த வாலிபரின் செல்போன் மற்றும் டிக்டாக் முகவரி எண்களை வைத்து புலனாய்வு செய்த போலீஸார், அவர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பெரியார்நகரைச் சேர்ந்த தம்பிராஜ் மகன் சுபாஷ்கண்ணன் ( 19 ) என்று கண்டுபிடித்தனர்.

பின்னர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் உத்தரவின் பேரில், பெண்ணின் மீதான் பாலியல் சீண்டல் தடுப்புச்சட்டத்தின் கீழ் லால்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய்யப்பட்டு, சமயபுரம் காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான தனிப்படையினர் மதுரை சென்று சுரேஷ்கண்ணனை கைது செய்தனர்.  மேலும் சுரேஷ் கண்ணனிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.  கடைசியில் லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீஸார் பெண் காவலரை வீடியோ எடுத்ததற்கும் அதை டிக்டாக் வீடியோ செய்து பதிவிட்டதற்கும் தண்டனையாக திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : #TIKTOK #POLICE #YOUTH #WOMAN