'கணவனை' மாட்டிவிட திட்டம்... 'காதலனுக்கு' தெரியாமல்... 'குழந்தையை' கொலை செய்த இளம்பெண்... போலீசை 'அதிரவைத்த' வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 20, 2020 02:05 PM

கண்ணூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கொலை செய்த பெண்ணை கேரள போலீசார் கைது செய்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் கொலை குறித்து விசாரணை நடத்திய போது அவர் கொடுத்த வாக்குமூலம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

How planned and executed? Kerala woman\'s confession here!

அதில், '' எனது காதலனை திருமணம் செய்வதற்காக குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டேன். இதனால் கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த எனது கணவரை வீட்டிற்கு கூப்பிட்டேன்.  இருவரும் ஒரே அறையில் படுத்து தூங்கினோம். கணவர் தூங்கிய பிறகு குழந்தையை கொலை செய்துவிட்டு மீண்டும் வந்து எதுவும் தெரியாதது போல படுத்து கொண்டேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் குழந்தையை கொலை செய்வதை காதலனிடம் சரண்யா தெரிவிக்கவில்லை. மேலும் அவரது காதலனுக்கு வேறொரு காதலி இருப்பதும், சரண்யாவை திருமணம் செய்து கொள்கிறேன் என அவர் உறுதி அளிக்காததும் தற்போது தெரிய வந்துள்ளது. இதுதவிர தன்னுடைய இன்னொரு காதலியை திருமணம் செய்துகொள்ள அவர் முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தடயங்களை சேகரிப்பதற்காக சரண்யாவை போலீசார் குழந்தை கொலை செய்யப்பட்ட கடற்கரைக்கு அழைத்து சென்றனர். அப்போது சரண்யாவின் பெற்றோர் உட்பட அங்கு கூடியிருந்த அனைவரும் சரண்யாவை கொலை செய்யுமாறு கூச்சலிட்டனர். இதனால் அங்கு  நிலவியது. தொடர்ந்து சரண்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.