சண்டையால் 'பிரிந்து' சென்ற மனைவி... சோகத்தில் புது 'மாப்பிள்ளை' எடுத்த விபரீத முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீடு செல்ல, அந்த சோகத்தில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(45). கடந்த 3 மாதங்களுக்கு முன் சிவகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் சிவகுமார் இருந்த அறை உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை அக்கம், பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது சிவகுமார் அங்கு தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர். மனைவி பிரிந்து சென்றதால் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
