எப்டி என் 'பையன' அடிக்கலாம்?... பள்ளிக்கே சென்று...ஆசிரியரை பெல்ட்டால் 'சரமாரியாக' தாக்கிய தந்தை!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னுடைய மகனை அடித்த ஆசிரியரை பெல்ட்டால் சரமாரியாக தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுவையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராக பணிபுரியும் எட்வின் ராஜ் என்பவர் சிறப்பு வகுப்புக்கு லேட்டாக வந்ததாக கூறி பள்ளி மாணவன் ஒருவனை கண்டித்து அடித்துள்ளார். தொடர்ந்து அந்த மாணவன் வகுப்பறையில் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்து, அவனை மீண்டும் கண்டித்துள்ளார். இதில் அந்த மாணவன் கோபித்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்த மாணவனின் தந்தை பள்ளிக்கு வந்து எதற்காக என் மகனை அடித்தீர்கள்? என கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் ஆசிரியர் எட்வின் ராஜை ஆபாசமாக பேசிய அவர் தான் அணிந்திருந்த பெல்ட்டால் சரமாரியாக தாக்கவும் செய்துள்ளார். இதில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு, அவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற ஆசிரியர் இதுகுறித்து போலீசில் புகார் செய்ய, அவர்கள் வழக்குப்பதிவு செய்து மாணவனின் தந்தையை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
