நீண்ட நேரமாக காத்திருந்தும் ‘பேருந்து’ வராததால்... போக்குவரத்து துறைக்கு வேறலெவல் ‘அதிர்ச்சி’ கொடுத்த ஊழியர்...
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் ஊருக்கு செல்ல பேருந்து எதுவும் கிடைக்காததால் அரசுப் பேருந்தை ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் விகராபாத் (Vikarabad) பேருந்து நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் வேலை முடிந்து ஊருக்குச் செல்வதற்காக காத்திருந்துள்ளார். ஆனால் அப்போது அவ்வழியாக எந்த பேருந்தும் வராமல் இருந்துள்ளது. இதையடுத்து அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பிறகு தான் செல்ல வேண்டிய இடம் வந்ததும், அவர் அந்தப் பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து காணாமல்போன பேருந்து குறித்து விசாரித்தபோது, அதை ஊழியர் ஒருவர் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
