‘உடன்’ வர மறுத்ததால்... ‘ஆத்திரத்தில்’ இளைஞர் செய்த காரியம்... மனைவி, மாமியாருக்கு நேர்ந்த ‘கொடூரம்’... ‘பரபரப்பு’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 21, 2020 01:10 AM

ஆரணி அருகே உடன் வர மறுத்த மனைவியையும், தடுக்க வந்த மாமியாரையும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aarani Man Stabs Wife And Mother In Law Over Family Issue

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கல்குப்பம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வராசு. இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், தன்னுடைய மாமியார் வீட்டுக்கு சென்ற செல்வராசு, மனைவி ஜெயந்தியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் உடன் வர மறுக்க, கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த செல்வராசு, தான் வைத்திருந்த கத்தியால் ஜெயந்தியை குத்தியுள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து செல்வராசுவைத் தடுக்க வந்த ஜெயந்தியின் தாய் விஜயாவையும் அவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள செல்வராசுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #FAMILY #HUSBAND #WIFE #MOTHERINLAW