'நோகாமல்' நொங்கு திங்க ஆசைப்பட்ட 'மைனர்'... 'பொடனியில்' தட்டி இழுத்து வந்த 'போலீசார்'... பொதுமக்கள் முன்னிலையில் 'மாங்கல்யம் தந்துனானே'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிட்டு திருமணத்திற்கு மறுத்த இளைஞரை பிடித்த போலீசார் பொதுமக்கள் முன்னிலையில் காதலியின் கழுத்தில் தாலி கட்ட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த வசந்த பிரியா என்பவர், பெண்ணாடத்தில் உள்ள கவரிங் நகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த கடை வாசலில் பூ விற்று வந்த இளைஞருடன் வசந்தபிரியாவுக்கு காதல் ஏற்பட்டது. ஓராண்டாக காதலித்து வந்த இருவரும் நெருங்கிப் பழகினர். இந்த நிலையில், ஒரு நாள் தான் கர்ப்பமாக இருப்பதாக வசந்தபிரியா குறிப்பிட்டுள்ளார். இதைக் கேள்விப்பட்டதும் கர்ப்பத்தை கலைத்து விடுமாறு அந்த இளைஞர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுக்கவே அவருடனான தொடர்பை அந்த இளைஞர் துண்டித்துக் கொண்டார்.
மேலம் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தபிரியா இளைஞரின் பெற்றோரிடம் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களும் தட்டிக்கழித்ததால் விருத்தாச்சலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கை பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரையும், பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வசந்தபிரியாவை திருமணம் செய்ய அந்த இளைஞர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து காவல்நிலையம் அருகில் உள்ள கோயிலில் வைத்து தாலி கட்ட வைத்தனர்.
