13 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை முடிவுக்கு வந்தது...'அனைத்து' விதமான போட்டிகளில் இருந்தும் 'ஓய்வு' பெறுகிறேன்...பிரபல வீரர் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 21, 2020 04:54 PM

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா அறிவித்து இருக்கிறார்.

Cricket Player Pragyan Ojha quits all forms of Cricket

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓஜா கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். 33 வயதான ஓஜா இதுவரை இந்திய அணிக்காக 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக ஓஜா இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் ஆடினார்.

அந்த போட்டியோடு சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே ஓஜாவின் கடைசி போட்டியாகவும் அமைந்து விட்டது. அதேபோல முதல்தர கிரிக்கெட்டில் கடந்த  2018-ம் ஆண்டு பீஹார் அணிக்காக ஓஜா ஆடினார். அதன்பின் அவர் கிரிக்கெட் ஆடவில்லை. இந்த நிலையில் ஓஜா தற்போது தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர், ''எனக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நேரமிது,'' என தெரிவித்து இருக்கிறார். ஐபிஎல்லை பொறுத்தவரை டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக ஆடி இருக்கிறார். இரண்டு அணிகளுமே இவர் விளையாடிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.