'தட்கல்' டிக்கெட்னு சாதாரணமா நினைக்காதீங்க!.. ரூ.100 கோடி மோசடி செய்த கும்பல்... திடுக்கிடும் டிஜிட்டல் முறைகேடு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 19, 2020 11:33 AM

சட்ட விரோத மென்பொருளை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்து வந்த 60 ஏஜெண்டுகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

police arrests frauds for misusing thatkal reservation

ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் தீர்ந்து போய்விடுவதால், ரயில் நிலைய கவுண்ட்டர்களில் காத்திருக்கும் பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதுகுறித்து எழுந்த புகாரின்பேரில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தை முடக்கும் 'ஏ.என்.எம்.எஸ்., எம்.ஏ.சி.,  ஜாக்குவார் ஆகிய சட்டவிரோத மென்பொருளை ஏஜெண்டுகள் பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது தெரியவந்தது.

இந்த மென்பொருளை முடக்கிய போலீஸார், பல்வேறு ரயில்வே கோட்டங்களை சேர்ந்த 60 ஏஜெண்டுகளை கைது செய்துள்ளனர். இவர்கள் இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடி முதல் 100 கோடி வரை டிக்கெட் எடுத்து கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

எனவே, பயணிகளுக்கு இனி எளிதாக தட்கல் டிக்கெட் கிடைக்கும் என்று ரயில்வே பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : #TRAIN #TATKAL #FRAUD #POLICE