'பாட்டு மட்டும் இல்ல; வாய்ஸூம் இளங்காத்துதான்'.. அசத்தும் ராஜதுரை.. நெகிழவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Oct 17, 2019 09:27 AM

பார்வையற்றோரின் சவால் மிகவும் அரிதானதும் கடினமானதுமான ஒன்று. இயல்பாக இருப்பவர்கள் போல அவர்களால் இந்த உலகை காணமுடிதல் இயலாதது. 

visually impaired person rajadurai singing video goes viral

ஆனாலும், அவர்களின் நம்பிக்கை எனும் ஒளிதான் அவர்களுக்கு வெளிச்சமாய் இருந்து வழிநடத்துகிறது. அதற்கு அவர்களுக்கு முற்றிலும் உற்ற துணைவனாக இருப்பது பாடல்கள்தான். அப்படித்தான் தற்போது ராஜதுரை என்கிற பார்வை சவால் உள்ள இளைஞர் ஒருவர் பாடும் இளங்காத்து வீசுதே பாடல், இளங்காற்றை போல இணையவாசிகளின் இதயங்களை வருடியுள்ளது. 

அதனாலேயே பலரும், வகுப்பறையில் நின்று ராஜதுரை பாடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக பார்வை சவால் உள்ள திருமூர்த்தி என்பவர் இதேபோல் கண்ணான கண்ணே பாடலை பாடி இணையத்தில் வைரலானதை அடுத்து, அவருக்கு இசையமைப்பாளர் டி.இமான், தன் படத்தில் பாடுவதற்கு வாய்ப்பளிப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags : #VISUALLYCHALLENGED #VIDEOVIRAL