'இதயங்களை வென்ற குட்டி யானை'.. 'அதன் க்யூட்டான செயலுக்கு'.. குவியும் பாராட்டுக்கள்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Sep 17, 2019 10:46 AM

விலங்கினங்களுக்குள் இரண்டு விதமான தன்மைகள் இருக்கவே செய்கின்றன. ஒன்று, அவை தங்களின் இயல்பு நிலையில் இருந்து லயப் பிறழ்வு ஏற்பட்டால் என்ன செய்வதென்று அறியாது மிருகத் தனத்தை வெளிப்படுத்துவது. இன்னொன்று அவற்றின் உணர்ச்சிப் பெருக்கு அவற்றுக்குள்ளும் மனிதநேயத்துக்கு நிகரான ஒன்றை வெளிக்கொணரும்.

Baby Elephant thought the man was drowning and Saves

அப்படித்தான் குட்டி யானை ஒன்றிற்குள் இருக்கும் மனித நேயம் ஊற்றெடுத்துள்ளது. ஆற்றில் நீந்திக் களித்துக் கொண்டிருந்த ஒருவர், உண்மையில் நீந்த முடியாமல் போராடி, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவித்துக்கொண்டிருப்பதாக நினைத்து குட்டி யானை ஒன்று, அந்த நபரைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு பலரும் பலவிதமான கமெண்டுகளைக் கொடுத்து வருகின்றனர். மிருகங்களின் மனதுக்குள் எப்போதும் இந்த அசட்டுத் தனமான ஈரம் இருக்கும் என்றும், அந்த குட்டி யானை செம்ம, சோ ஸ்வீட், ஒருவரை காப்பாற்ற நினைத்து தண்ணீரில் இறங்கி தூக்கி வெளியில் இழுக்கும் அதன் இருதயம் இனிமையானது என புகழ்ந்து தள்ளுகின்றனர் இணையவாசிகள்.

Tags : #ELEPHANT #SAVE #LIFE #HUMANITY #ANIMAL #VIDEOVIRAL