'என்ன தைரியம் இருந்தா இப்படி செய்வ?'.. 'திமுதிமுவென புகுந்து சரமாரி தாக்குதல்.. 15 லட்சம் ரூபாய் அபேஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 23, 2019 01:11 PM

டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் அருகே, பலசரக்குக் கடை உரிமையாளர் ஒருவர் தன் காரைக் கொண்டு, இன்னொரு கார் மீது மோதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கார் உரிமையாளர்கள், பலசரக்குக் கடை வைத்திருக்கும் இந்த நபரை கவனித்துள்ளனர்.

man lost 15 lakh from his shop after thrashed by a gang

இதனையடுத்து, தங்கள் கார் மீது மோதிய அந்த கடை உரிமையாளரின் கடைக்கு, மோதப்பட்ட காரின் உரிமையாளர்கள் நள்ளிரவில் சென்றுள்ளனர். அங்கு கடையின் உரிமையாளர் கணக்கு வழக்கைப் பார்த்து, கடையை அடைக்கும் நேரத்தில் அந்த கடைக்குள் நுழைந்த சிலர் கார் உரிமையாளரை சரமாரியாத் தாக்கியுள்ளனர்.

இதுபற்றி பேசிய கடை உரிமையாளர், இந்தத் தாக்குதலுக்கு பின், தான் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்தில்லாமல் பிழைத்ததாகவும், மேலும் தன்னைத் தாக்கியவர்கள் தன் கடையில் இருந்த 15 லட்ச ரூபாய் பணத்தை சூறையாடிவிட்டுச் சென்றதாகவும் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றிய பேசிய பலரும், இந்த தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் எப்போதும் இப்படி அராஜகம் செய்கிறார்கள் என்றும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #VIDEOVIRAL #BIZARRE #LOOT #CAR #THRASHING