'வாயில் HANDBAG, காலில் காயம்.. நொண்டிச் செல்லும் நாய்.. கண்டுகொள்ளாத உரிமையாளர்'.. 'கண்கலங்க' வைத்த 'வீடியோ'!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Oct 11, 2019 02:38 PM

நாய்கள் வாயில்லா ஜீவன்கள் என்றாலும், அவற்றை நன்றியில்லா ஜீவன்கள் என்று சொல்வதற்கு யாருக்கும் மனம் ஒப்பாது.

video of Dog holding its human’s handbag, goes viral

அவற்றின் தன்மைகளில் உயர்ந்ததும், முதன்மையானதுமான நன்றியும், அன்பும் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும். அந்த அளவுக்கு அவற்றின் பற்று மனிதர்களின் மீது, அதாவது தன்னை வளர்க்கும் உரிமையாளர் அல்லது எஜமானர் மீது இருக்கும்.

இப்படி ஒரு விசித்திரமான பிறவியான நாய் ஒன்று, தனது உரிமையாளரான பெண் ஒருவரின் கைப்பையை, தனது வாயில் கவ்விக்கொண்டு, சாலையில் நடந்து செல்லும் அந்த பெண்ணின் பின்னாலேயே செல்வதாக 24 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆனாலும் அந்த உரிமையாளர பெண், பரபரப்பாக கார்கள் வரும் சாலையில் தன் பின்னால் நடந்து வரும் வளர்ப்பு நாயைக் கண்டுகொள்ளாமல் செல்வதாகவும், நாயோ காலில் அடிபட்ட நிலையில் நடந்து செல்வதாகவும் வீடியோவில் தெரிவிதாக அந்த வீடியோ இணைப்பில் கமெண்ட் செய்துள்ளனர்.

இன்னும் ஒருவர், தனக்கு அந்த நாயைத் தெரியும் என்றும் அந்த நாய் ஐஸ் கிரீமை விரும்பி சாப்பிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ மில்லியன் கணக்கானோரின் இதயத்தை வென்றுள்ளது.

Tags : #DOGSARETHEBEST #DOGSLIFE #VIDEOVIRAL