'கர்மா ஒரு பூமராங்'னு நிரூபித்த சிறப்பான.. தரமான சம்பவம்'.. இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Oct 15, 2019 11:11 PM

கர்மா ஒரு பூமராங் என்று ஒரு புதுமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். அதுதான் தற்போது நடந்திருக்கிறது என்று சொல்லலாம்.

Karma is a boomerang hence proved here, videoviral

டெல்லி அருகே ஒரு வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை நபர் ஒருவர் வஞ்சனையுடன் தாக்கும்போது அவருக்கு நடந்த விபரீத எதிர்வினை அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் வீடியோவாக பதிவாகியதோடு, உடனுக்குடன் கர்மா பழி தீர்த்துக்கொள்ளும் என்கிற விஷயத்தை நிரூபித்துள்ளது.

மார்டின் அந்தோனி என்பவர் பகிர்ந்திருந்த அந்த வீடியோவில் 41 வயதான நபர் ஒருவர், மார்டினின் காரை ஒரு செங்கல் எடுத்து ஓங்கி அடிக்கிறார். ஆனால் மிகவும் வலிமையான அந்த கார் கண்ணாடியில் செங்கல் பட்டு, மீண்டும் அந்த நபரின் மீதே அந்த செங்கல் வந்து அடிக்கிறது.

இதனையடுத்து அவர் மீது அளித்த புகாரின் பேரில், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

 

Tags : #VIDEOVIRAL #KARMA