'பயமா? எனக்கா?'.. 'என்னா துணிச்சல்.. சான்ஸே இல்ல'.. 'ஒரு நிமிஷத்துல கொலநடுங்கிடுச்சு'.. வைரலாகும் 'சிங்கப்பெண்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 03, 2019 10:44 AM

நியூயார்க்கின் புகழ்பெற்ற மிருகக் காட்சி சாலை ஒன்றில் சிங்கத்தின் தடுப்பையும் மீறி, பெண்ணொருவர் காட்டு சிங்கத்தின் அருகே சென்று டான்ஸ் செய்த சம்பவம் மிரளவைத்துள்ளது.

woman climbs inside zoo exhibits and meets lion viral video

இளங்கன்று பயம் அறியாது என்று சொல்வார்கள். அப்படித்தான் பல பெண்கள் உண்மையில் துணிச்சலுடனும், துருதுருவென்றும் இருப்பதுண்டு. அப்படி ஒரு பெண்தான்,  நியூயார்க்கில் ஒரு மிருகக் காட்சி சாலைக்கு சென்றபோது தடுப்புக் கம்பி வேலிகளுக்கு அந்தப்பக்கம் இருந்த காட்டு சிங்கத்தை பார்த்துள்ளார்.

உடனே ஆர்வமான, அந்த இளம் பெண், எகிறிக்குதித்து சிங்கத்தின் அருகே  செல்கிறார். இதனை யாரோ வீடியோ எடுக்கின்றனர். வீடியோவில் வரும் குரல்கள் எல்லாம், அந்த பெண்ணிடம், ‘அங்கு போக வேண்டாம்.. திரும்பி வந்துவிடு’ என்று வருகின்றன. அதேபோல் சிலர் சிங்கத்திடமும், ‘நீயாவது அந்த பெண்ணை திரும்பி வரச்சொல்’ என்று கோரிக்கை விடுகின்றனர்.

ஆனால் அந்த பெண்ணோ அந்த சிங்கத்தின் முன் பாடிக்கொண்டே, ஒரு சிறிய டான்ஸையும் போட்டுவிட்டு, தன்னைப் பார்த்து கர்ஜித்த பெண் சிங்கத்தின் விரல்களை கோதிவிட்டு, அதன் மானசீக அன்பைப் பெற்றுக்கொண்டு, அசால்டாக வெளிவந்திருக்கிறார். மிருகக் காட்சி சாலையின் ஸீரோ டாலரன்ஸ் பாலிஸி மற்றும் ட்ரஸ்பாஸ் ஒழுங்கு விதிகளையும் மீறி உள்நுழைந்த எல்லோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது உண்டு.

காரணம், மிருகங்கள் எப்போது என்ன செய்யும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் இந்த சிங்கப்பெண் செய்த காரியம் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக, வைரலாகி வருகிறது.

Tags : #LION #ZOO #WOMAN #INSTAGRAM #VIDEOVIRAL