'அடுத்த உசேன் போல்ட்-ஆ இருப்பாரோ'.. என்னா வேகம்.. இளைஞருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Aug 17, 2019 10:07 PM
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜூஜூவிடம், பொறுப்பு பாஜக தலைவர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் கேட்டுக்கொண்டபடி, கிரண் ஒரு ஓட்டப்பந்தய வீரருக்கு உதவ முன்வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியூட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஷிவ்ராஜ் சிங் சௌகான் தனது ட்விட்டரில் ஒரு அரிய மனிதனின் அபரிமிதமான சாதனை ஒன்றை பதிவிட்டதை அடுத்து, அந்த மனிதனை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. காரணம் ஷிவ்ராஜ் சிங் பதிவிட்ட வீடியோ ஒன்று, அளப்பரிய ஓட்டப்பந்தய வீரர் ஒருவரின் சாதனையை கண்முன் நிறுத்தியது.
அதன்படி, அந்த வீடியோவில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ராமேஸ்வர் சிங் என்கிற இளைஞர் 11 விநாடிகளில் 100 மீட்டர் தூரங்களை ஓடிக் கடந்துள்ளார். இந்த வீடியோவை வைத்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருக்கு ஷிவ்ராஜ் சிங் கோரிக்கை வைத்தார்.
அதைப் பார்த்த கிரன் ரிஜூஜூ, அந்த பையனை யாரேனும் அழைத்து வாருங்கள் எனச் சொல்லி, 24 வயதேயான ராமேஸ்வர் சிங் ஓடுவதற்கும், தடகள பயிற்சி மேற்கொள்ளும் விதமாக, கோச்சிங் செல்வதற்கான இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கப்பட்ட உதவியதோடு, அவருக்குத் தேவையானவற்றை செய்துகொடுக்கவும் கிரண் உதவியுள்ளார். இந்த சம்பவம் இளைஞர் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு, எளிய மனிதர்களின் திறமைகள் இவ்வாறாக வெளிக்கொணரப்படுவதற்கு பலரும் நெகிழ்ந்துள்ளனர்.
Pls ask someone to bring him to me @ChouhanShivraj ji. I'll arrange to put him at an athletic academy. https://t.co/VywndKm3xZ
— Kiren Rijiju (@KirenRijiju) August 16, 2019