'BIKE-அ வீலிங் பண்ற எடமா இது?'.. 'இப்ப என்ன ஆச்சு?'.. பதற வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 10, 2019 03:13 PM

பெட்ரோல் பங்கில் பைக் ஓட்டி ஒருவர் செய்த வீலிங், வீடியோவாக இணையத்தில் வலம் வருவதோடு பார்ப்பவர்கள் மத்தியில் பரபரப்பைத் தொற்ற வைத்துள்ளது.

man wheels his bike in petrol bunk here is what next

பெட்ரோல் பங்கு ஒன்றில் வரிசையாக பைக்கில் வருபவர்கள் ஒவ்வொருவராக பெட்ரோல் போட்டுக் கொண்டு வண்டியை எடுத்துச் செல்கின்றனர். அதே வரிசையில் ஒரு தாத்தாவை பின்னால் உட்கார வைத்த்துக்கொண்டு வந்த வாகன ஓட்டி ஒருவர், திடீரென பைக்கை முறுக்கியிருக்கிறார்.

அவ்வளவுதான், முறுக்கிய வேகத்தில் முன்னால் இருந்த வாகன ஓட்டிகள் மீது பைக் மோதியதோடு மட்டுமல்லாமல், பின்னால் அமர்ந்திருந்த தாத்தா, கீழே விழுந்துள்ள சம்பவம் அங்கிருந்தவர்கள் அத்தனை பேரையும் பதறவைத்துள்ளது. அதன் பின்னும், அந்த வாகன ஓட்டியின் பை இன்னொருவரின் பைக்கில் மோதி சிக்கிக் கொண்டு தவிக்கிறது.

எங்கே எப்போது நடந்தது என தெரியாத இந்த சம்பவம் ட்விட்டரில் வீடியோவாக ட்ரெண்டாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும், தனக்கு முன்னால் ஒருவர் செல்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல், முந்தியதால் இந்த விளைவு ஏற்பட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர், வீலிங் செய்த அந்த வாகன ஓட்டியின் பின்னால் அமர்ந்திருந்த தாத்தாவின் நிலைமைதான் இந்த சம்பவத்தில் வருந்தத் தக்க ஒன்றாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #VIDEOVIRAL #BIZARRE