'அழாம இருமா'.. 'அண்ணன் சமைச்சு தர்றேன்'.. கடைசி நொடியில் கலங்க வைத்த 'அண்ணன் - தங்கை பாசம்'.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்By Siva Sankar | Sep 17, 2019 11:33 AM
குழந்தைப் பருவமே முதிராத நிலையில், பாசத்துடன் ஒருவருக்கொருவர் உறவாடி காண்போர்களை நெகிழவைக்கும் அண்ணன் - தங்கை வீடியோ ஒன்று சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன் படி, இந்த பாசமலர் அண்ணன் தனது குட்டித் தங்கைக்காக கடாயில் இந்தோனேசியன் பிரைடு ரைஸ் செய்து கொடுக்க, அந்தத் தங்கை சற்று அருகில் உள்ள குட்டி பலகையில் அமர்ந்துள்ளாள். அண்ணன் முதலில் அந்த கருப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி, முட்டையை உடைத்து ஊற்றி, தன் தங்கையின் கையில் இருந்த கரண்டியை வாங்கி பிரை செய்கிறான்.
அதன் பின்னர் தேவையான ஒவ்வொரு பொருளையும் அந்த கடாயில் கொட்டி, தன் தங்கைக்கும் தனக்குமான உணவைத் தயார் செய்கிறான். அதன் பின் ரைஸ் தயாரானதும், ஒரு பவுலில் கொட்டி தன் தங்கைக்கு தன் கையாலே ஊட்டி விடுகிறான். இந்த சிறு வயதில் இந்த அண்ணன் தங்கையிடம் உள்ள அன்பு பார்ப்போரை உருக வைத்தபடி வீடியோவாக வலம் வருகிறது.
fess lucu anedd, masakin nasi goreng buat adeknya😭❤ pic.twitter.com/bbbd7iWcfr
— FESS (@FOODFESS2) September 12, 2019
