'யாரு சார் நீங்க?'.. எல்லோர் இதயத்தையும் வென்ற 'வேற லெவல்' ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 27, 2019 05:23 PM

ஒடிசாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனது மாணவர்களுக்கு நடனமாடி, பாடம் கற்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Dancing Teacher wins all the hearts video goes viral

ஒடிசாவைச் சேர்ந்த 56 வயதான ஆசிரியர் பிரஃபுல்லா குமார், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு வழக்கமான பாணியில், புத்தகத்தில் இருப்பதை மட்டும் அப்படியே ஒப்பித்துக் காட்டிவிட்டு அல்லது வாங்கும் சம்பளத்துக்கு கூடுதலாக கொஞ்சம் விளக்கிவிட்டு போகக் கூடாது என்று நினைத்துள்ளார்.

இதன் காரணமாக, பாடம் நடத்துவதோடு மாணவர்களுக்கு பாட்டு,நடனத்துடன் கூடிய பாடம் என கூடுதலாக கிரியேட்டிவ் வகுப்புகளை நடத்த ஆரம்பித்துள்ளார். இதன் முதல் படியாக மாணவர்களுக்கு வகுப்பறையில் நுழைந்ததும் உடற்பயிற்சி செய்யச் சொல்வதாகவும், அதனால் அவர்கள் உற்சாகமாவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடம் நடத்தும்போது சிறப்பு இழுவை, அசைவுகளுடன் கூடிய பாடல், நடனம் வழியே சொல்லிக்கொடுப்பதால் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவதாகக் கூறி நெகிழ்ந்துள்ளார். இவர் இவ்வாறான முறையில் பாடம் நடத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

Tags : #TEACHER #VIDEOVIRAL #SCHOOL