'எப்படி இருக்கு எங்க ஊரு கலை?'..'கண்ணுல அபிநயம்'.. 'உடல் மொழியில நாட்டியம்'.. 'வெளிநாட்டவர்களை' அசரவைத்த தமிழர்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 04, 2019 11:39 AM

ஊர் சுற்றிப் பார்ப்பது என்பது ஜாலியான விஷயம்தான். சிறந்த பொழுதுபோக்கான விஷயமாகவும் அது அமையும்.

TN Tourist Guide Dancing and Expressing video goes viral

அதனால்தான் பலரும் ரிலாக்ஸ் செய்வதற்காகவும், புதுப்புது விஷயங்களையும், வரலாறுகளையும், கலாச்சார-பண்பாட்டு விஷயங்களையும் தெரிந்துகொள்வதற்காகவும், சுற்றுலா மேற்கொள்கின்றனர். ஆனால் நமக்கு வழிகாட்டும் டூரிஸ்ட் கைடு என்று சொல்லப்படும் நபர் அமைதியாக இருந்தால் அது எவ்வளவு வறட்சியாக இருக்கும்.

ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த டூரிஸ்ட் கைடு பிரபு, நளினங்களுடன் நடனமாடியும், முக பாவனைகளையும், உடல் மொழியினையும் பயன்படுத்தி சுற்றுலா தளங்கள் பற்றி விளக்கிச் சொல்வதாக வலம் வந்த வீடியோ ஒன்றினை பிரியங்கா சுக்லா என்கிற ஐஏஎஸ் அதிகாரி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், ஜதி பாடியும், பரத நாட்டியம் ஆடியும் வெளிநாட்டு தம்பதிகளுக்கு அபிநயம் செய்து காட்டியும் ஹிந்துஸ்தானிய பாரம்பரிய நடனம் என்று ஆங்கிலத்தில் சொல்லி அழுந்த பதிய வைக்கிறார். அவர் பேசி முடித்ததும் அதை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் ஆரவாரம் செய்து கைத்தட்டி அவரை பாராட்டுகின்றனர்.

Tags : #VIDEOVIRAL #TOUR #TOURIST