'ஒருகாலும் தோக்கக் கூடாது; தேவை உழைப்பு மட்டும்தான்'.. இந்தியாவிலேயே முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஐஏஎஸ்!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Oct 14, 2019 11:34 PM

எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்ற பணி அனுபவத்தின் அடிப்படையில் திருவனந்தபுரம் மாவட்டத்தின் துணை கலெக்டராக 31 வயது பிரஞ்சால் பட்டில் பதவியேற்றார்.

visually challenged woman becomes Indias first IAS officer

அப்போது,  ‘ஒரு காலும் நாம் வீழ்த்தப்படக் கூடாது, சோர்வடையவும் கூடாது. நம் உழைப்புதான் புதிய திருப்பத்தை உண்டாக்கும். இந்த பொறுப்பினை ஏற்பதை பெருமையாக உணர்கிறேன்’ என்று பேசினார் பிரஞ்சால் பட்டில். 2016-ஆம் ஆண்டு முதன்முதலில் ஐஏஸ் தேர்வினை எழுதி தேசிய அளவில் 733வது இடத்தையும், 2017-ஆம் ஆண்டு மீண்டும் தேர்வெழுதியதில் 124வது இடத்தையும் பிடித்து, இந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஐஏஎஸ் அதிகாரி என்கிற பெருமையைப் பெற்றார்.

அதன் பின் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பணிபுரிந்தார். மகாராஷ்டிராவின் உள்ஹாஸ் நகரைச் சேர்ந்த பிரஞ்சால் பாட்டில் வயதில் பார்வையை இழந்தாலும், தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியால், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் சம்மந்தப்பட்ட தனிப்பாடத்தைத் தேர்ந்தெடுத்து முதுநிலைப்பட்டம் பெற்று, தற்போது நாட்டின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் துணை கலெக்டராக சேவைப் பணியில் பிரகாசமாய் ஒளிரவிருக்கிறார்.

Tags : #VISUALLYCHALLENGED #IAS #WOMAN