'நடிகை சில்க் ஸ்மிதா மாதிரியே இருக்கும் பெண்?'.. வியப்பூட்டும் புதிய வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 11, 2019 04:47 PM

மறைந்த 80களின் நடிகை, சில்க் ஸ்மிதா போலவே இருப்பதாக, சமூக வலைதளங்களில், பெண் ஒருவரின் வீடியோ பிரபலமாகி வருகிறது.

girl looks like old actress silk smitha video goes viral

குறிப்பிட்ட ஆணடு காலம் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கியமாக பேசப்பட்ட நடன நடிகை சில்க் ஸ்மிதா, 1996-ம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தன்னுடைய 35வது வயதில் தற்கொலை செய்துகொண்டு மறைந்தார். திரைத்துறையினர் மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைத் தந்த செய்தியாகவே அது இருந்தது.

இத்தனை ஆண்டுகாலம் மாறினாலும், தலைமுறைகள் பல வந்தாலும் கூட, சில்க்கின் வசீகர முகமே அவரின் முகத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்கான ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது என்று சொல்லலாம். அதனாலேயே என்னவோ, தற்போது இணையதளத்தில் வலம் வரும் வீடியோ ஒன்றில் இருக்கும் பெண்ணை பலரும் பார்ப்பதற்கு சில்க் போலவே இருப்பதாகக் கூறி சிலாகித்து வருகின்றனர்.

ஒரு வகையில், முன்முடிவோடு பார்த்தால், ஓரளவுக்கு சில்க் ஸ்மிதாவின் முக சாயல் தெரியலாம் என்பதை இந்த வீடியோவை பார்க்கும் பலரால் உணர முடிகிறது. எனினும் இந்த வீடியோவில் இருக்கும் அந்த சில்க் ஸ்மிதா போன்ற பெண் யாரென்றும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்றும் தெரியவரவில்லை.

Tags : #SILK #VIDEOVIRAL