'இதான் அடுத்த ஜிமிக்கி கம்மல்!'.. 'வியக்க வைத்த பாதிரியார்'.. இணையத்தை புரட்டிப் போட்ட வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Sep 23, 2019 12:02 PM
டெல்லியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் மலையாளப் பாடல் ஒன்றுக்கு உற்சாக நடனமாடும் வீடியோ ஒன்றினை மலையாள நடிகர் நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து வைரலாகி வருகிறது.

பொதுவாக பாதிரியார் என்றால் இறுக்கமாகவும், இறைத் தொண்டிலேயே முழு நேரத்தையும் செலுத்திக் கொண்டிருப்பவர்கள் என்கிற பொதுப்புத்தியை உடைத்து, மனம் போன போக்கில் தன்னியல்பாக நடனம் ஆடிய பாதிரியார் ஒருவரின் வீடியோ இணையத்தையே புரட்டி போட்டு வருகிறது.
மலையாள நடிகர் நிவின் பாலி நடித்திருந்த லவ்-ஆக்ஷன் -டிராமா என்கிற படத்தில் குடுக்கு பட்டிய குப்பாயம் என்கிற பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலுக்கு மேத்யூ கிளிக்கெச்சிரா என்கிற பாதிரியார், டெல்லியின் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றின்போது நடனமாடியுள்ளார்.
அவரது உற்சாகமான நடனமே, இந்த வீடியோ வைரலாகி வருவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக மலையாளத்தில் வெளியான ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமானதை அடுத்து பலரும் அந்த பாடலுக்கு நடனமாடியதால் அப்பாடல் வைரல் ஹிட் ஆனது. இந்த வரிசையில் தற்போது இந்த பாடலும் துள்ளலாக இருப்பதால் ஹிட் அடித்து வருகிறது.
