'சொன்னபடிலாம் கேக்குது.. ATM-லாம் இருக்கு.. சர்க்கஸ் BIKE-ஆ இருக்குமோ?'.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 15, 2019 09:44 PM
இணையத்தைக் கலக்கி வரும் பைக் ஒன்றின் வீடியோ பரவி வருகிறது.

உத்தரபிரதேசத்தின் பேரலியைச் சேர்ந்த முகமது சையதுவின் புதுவிதமாக மாற்றங்கள் செய்யப்பட்ட பைக் இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து, பைக் பிரியர்களும், பைக் வெறியர்களும் இந்த பைக்கை பற்றி விசாரிக்காமல் இல்லை. அத்தனை சிறப்பு அம்சங்கள் வாய்ந்த இந்த பைக்கில் அப்படி என்ன அற்புதங்கள் இருக்கின்றன தெரியுமா?
71 வயதான சையது வாய்ஸ் கமாண்ட் மூலம் அந்த பைக்கை இயக்குவதும், பைக்கில் பாட்டு போடுவதும், பைக்கில் இருக்கும் ஏடிஎம்-மில் இருந்து அவர் எவ்வாறு தன் வாய்ஸ் கமாண்ட் மூலம் 5 ரூபாயை வரவழைப்பதும் எப்படி என்று இந்த வீடியோவில் டெமோ செய்து காட்டுகிறார்.
ஹனி சாக்ஸோனா என்கிற யூடியூப் பயனாளரின் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த வீடியோவில் உள்ள அந்த ரெட் கலர் பைக்தான் தற்போது பல இளைஞர்களின் கனவு பைக்காக மாறியுள்ளது.
