'மனுசங்கள விடுங்க'.. 'இப்ப இதுங்களாம் வெறித்தனமா ஃபாலோ பண்றத பாருங்க'.. பிரபல நடிகை பகிர்ந்த வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 09, 2019 06:26 PM

இன்றைய அவசர உலகத்தில் சிக்னலில் நிற்பதை விடவும் ஜென் நிலை என்று ஒன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாகன ஓட்டிகள் பரபரப்பாக இயங்குகின்றனர்.

even our animals obey traffic rules, preity zinta tweets

120 முதல் 90, 60 செகண்ட்கள் வரை காத்திருந்து சாலையைக் கடந்து செல்லும் பொறுமையின்றி மனிதர்கள் வெகுவேகமாக தத்தம் வாகனங்களில் பறந்து செல்லும் நிலையில், அத்தனை அவசர உலகத்துக்கு வித்திட்ட தவறு யாருடையது என்று தெரியவில்லை.

ஆனால், மாடு ஒன்று நிதானமாக நின்று, சாலையைக் கடந்து சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு வீடியோ சும்மா வைரலாகுமா என்ன? ஆம், பாலிவுட் நடிகையும், பிரபல ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், மாடு ஒன்று வாகனங்களோடும், மனிதர்களோடும் நின்று சிக்னலுக்காக காத்திருந்து சாலையைக் கடக்கிறது. இது பற்றி தனது பதிவில், ‘மனிதர்களை விடுங்க.. மாடுகள் கூட இப்போதெல்லாம் சாலைவிதிகளை முறையாக பின்பற்றத் தொடங்கிவிட்டன’ என்கிற கேப்ஷனுடன், ப்ரீத்தி ஜிந்தா பதிவிட்டுள்ளார்.

Tags : #COW #VIDEOVIRAL #PREITYGZINTA