'ஒரே செகண்ட்தான்'.. 'இல்லனா என்னாயிருக்கும்'.. 'பெண்ணுக்கு நேர்ந்த கதி'.. 'பதற வைக்கும்'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 30, 2019 02:06 PM

அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில் காருக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, நகர முயற்சித்த பெண்ணுக்கு நேர்ந்த திடீர் சம்பவம் பதற வைத்துள்ளது.

thought I was being robbed, deer jumps over womans head

காருக்கு எரிபொருள் நிரப்பிய லிண்டா டெனண்ட், திரும்பியுள்ளார். அவர் சற்றும் எதிர்பாராத வகையில், அவரது பின்னால் இருந்து யாரோ வருவது போல் ஒரு உள்ளுணர்வு அவருக்குத் தெரிந்திருக்கிறது. யாரோ தன்னை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தது போல் வந்து, தன்னிடம் இருந்து எதையோ பறித்துச் செல்லப் போவது போல் அவர் உணர்ந்துள்ளார்.

ஆனால் அவர் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்ததற்கு காரணம் ஒரு ஆள் அல்ல. அது ஒரு மான். காடுகளில் இருந்து தங்களுக்கான வளத்தையும் வாழ்வாதாரத்தையும் தேடி அலையும் விலங்கினங்கள் தற்போதெல்லாம் ஊருக்குள் நுழையும்  அவலம் உலக நாடுகள் முழுவதும் நிகழ்ந்து வருகின்றன.

அவ்வகையில், லிண்டா டெனண்ட் சற்றும் எதிர்பாராத வண்ணம் அவர் மீது பாய்ந்த அந்த மான், அவர் தலையில் முட்டி மோதியுள்ளது. இதனால் ரத்தம் வரும் அளவுக்கு லிண்டா பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அந்த வீடியோவை லிண்டா, இணையத்தில் பதிவிட்டதுமே, வீடியோ வைரல் ஆனது.

எனினும் அந்த, மானுக்கு கோபம் வரும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன் என்று தெரியவில்லை, அப்படி தெரியாமல் எதையாவது செய்திருந்தால் கூட, அடுத்த முறை அதனை செய்யக் கூடாது என்று கூறும் லிண்டா, நல்ல வேளையாக தலையில் தாக்கிய அந்த மான் தன் உடல் மீது பாய்ந்து கொம்பினை வைத்து உடலை அறுத்துக் கூறுபோட்டிருந்தால்,  ‘ஒரே ஒரு செகண்டில் உடல் துண்டு துண்டாக வெட்டுண்டிருக்கும்’, அவ்வாறு அந்த மான் தன் உடலுக்கு நேராக பாய்ந்து முட்டாமல் விட்டுவிட்டதே நிம்மதி தருவதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் தலையில் பலத்த காயமடைந்த அவர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பலரும் இணையவழியே ஆறுதல் கூறியும், அவரவர் சொந்த அனுபவங்களை பகிர்ந்தபடியும் நட்பு பாராட்டியும் நலம் விசாரித்தும் வருகின்றனர்.

Tags : #VIDEOVIRAL #BIZARRE #WOMAN