‘12 வயதில் இந்திய சிறுமி’... ‘தென் அமெரிக்காவில் செய்த சாதனை’... குவியும் பாராட்டுக்கள்!
முகப்பு > செய்திகள் > கதைகள்இந்தியாவை சேர்ந்த 12 வயது சிறுமி தென் அமெரிக்காவின் மிக உயரமான சிகரமான அகோன்காகுவாவின் உச்சியை எட்டி சாதனை புரிந்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்தவர் காம்யா கார்த்திகேயன். இவர் ஏற்கனவே ரூப்குண்ட் (5,020 மீ) மற்றும் சந்திரசீலா (4,000 மீ) போன்ற பல்வேறு மலையேற்றங்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் தனது 10- வது வயதில் எவரெஸ்ட் மலையை (5,346 மீ) அடைந்தார். இந்நிலையில், தென் அமெரிக்காவில் 6,960 மீட்டர் (22,237 அடி) உயரமுள்ள அகோன்காகுவா சிகரத்தை தனது தந்தையுடன் சேர்ந்து ஏறியுள்ளார்.
18 வயதுக்கு குறைவானவர் என்பதால் இந்த உயரமான மலையை ஏற முதலில் இவருக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மலையேற்றத்தில் காணப்படும் உடல்நலக்குறைவாலும் இவருக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. பின்னர், பின்பு நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றப் பிறகு இந்த முயற்சியில் ஈடுபட்டார். இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
