'நேற்று மாலை வெளியே சென்ற குழந்தை'... 'இன்று காலை ஆடைகள் கிழிக்கப்பட்டு'... 'சிவகாசியில் பயங்கரம்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரத்தில் வசித்து வருபவர், சுந்தரம். அவரது மகள் பிரித்திகா அங்குள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வெளியே சென்ற பிரித்திகா நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால், அச்சமடைந்த பெற்றோர் சிறுமியைத் தேடியுள்ளனர். இந்நிலையில், எங்கு தேடியும் கிடைக்காததால், சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரை காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், இன்று காலை முட்புதர்களுக்கு நடுவே அச்சிறுமியை அரை நிர்வாணமாக கண்டெடுத்துள்ளனர்.
அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை, வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Tags : #CRIME #SIVAKASI #GIRL
