'அடங்கப்பா'... 'காதலனுடன் ஊர் சுற்றுவதற்கு இப்படியொரு பொய்யா?!'... 'அதிர்ந்து போன காவல்துறை'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதலனுடன் ஊர் சுற்றுவதற்காக, தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக 16 வயது சிறுமி பொய் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் உள்ள சங்கரெட்டி காவல் நிலையத்தில், தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ஒரு சிறுமி புகார் அளித்துள்ளார்.
நேற்று காலை 9.30 மணி அளவில், 16 வயது நிரம்பிய அந்த சிறுமிக்கும் அவர் தாய்க்கும் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த சிறுமி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், அமீன்பூர் எனும் இடத்தில் தன்னை ரவுடிகள் சீண்டியதாகவும், பின் அவரைத் தொல்லை செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சங்கரெட்டி காவல் நிலையத்தில் அந்தச் சிறுமி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்தச் சிறுமியை யாரும் பலாத்காரம் செய்யவில்லை என்றும், அவர் கூறியது அனைத்தும் கட்டுக்கதை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், தன்னுடைய காதலனுடன் நேரம் செலவிடுவதற்காக, வீட்டில் இப்படியொரு பொய்யைக் கூறியதாகவும் போலீஸார் பதிவு செய்தனர்.
