'தண்ணீர் பாட்டிலால் சிறுமிக்கு நடந்த சோகம்'... 'மும்பையில் பயங்கரம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், பள்ளி முடிந்து பேருந்துவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை, அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த டிசம்பர் 19 அன்று நடந்த இச்சம்பவத்தில், பேருந்துவில் தனியாக இருந்த சிறுமியிடம் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தவறாக நடந்து கொண்டதோடு, அவரது பிறப்பு உறுப்பில் தண்ணீர் பாட்டிலையும் செலுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், ஊரில் இல்லாத போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், சிறுமியின் தாயார் வீடு திரும்பிய தினத்தன்று, இந்த சம்பவம் குறித்து தன் தாயிடம் சிறுமி விவரித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் சந்தீப் மிஷ்ரா மற்றும் உதவியாளர் ஷிவ் பிரசாத் யாதவ் ஆகியோர் மும்பை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பேருந்துவில் பயணம் செய்யும் குழந்தைகளிடம் உதவியாளர், அவ்வப்போது ஆபாசமான புகைப்படங்களை காண்பிப்பார் என பேருந்து ஓட்டுநர் காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மும்பை சுற்று வட்டாரப் பகுதியில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
