"ஒரு தலைக் காதல்"... "பின்தொடர்ந்து வந்த ஆண்"... "ஆசிட் வீசிய பெண்!"... "பொதுமக்கள் அதிர்ச்சி"...
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னைப் பின்தொடர்ந்து வந்த ஆணின் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் அருகே பவானி கஞ்ச் என்ற இடத்தில், 24 வயது இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. ரோஹித் யாதவ் என்ற அந்த இளைஞர், அவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை பல நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார்.
ஒரு தலைக் காதலாக இருந்த போதிலும், பல முறை அந்த பெண்ணிடம் தன்னுடைய காதலைத் தெரிவித்துள்ளார். அவற்றை அந்த பெண் நிராகரிக்கவே, மீண்டும் அவரைப் பின்தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், தன்னைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் மீது, அந்த இளம்பெண் இன்று காலை ஆசிட் வீசியுள்ளார். உடலின் சில பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து, மொரவன் பகுதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
