'பெத்த மகள தொல்ல பண்ணாங்க'... 'தட்டி கேட்டது தப்பா?'... 'தாய்க்கு நடந்த கொடூரம்'... 'குற்றவாளிகள் வெறியாட்டம்!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jan 18, 2020 11:15 AM

மகளை மானபங்கம் செய்ய முயற்சித்த 4 பேர் மீது கொடுத்து புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Woman killed for not withdrawing complaint against accused

உத்தரப்பிரதேச மாநிலம் கான்புர் அருகே, தனது மகளை பலவந்தப்படுத்தியவர்கள் மீது ஒரு தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து, வழக்கைத் திரும்பப்பெற வற்புறுத்தி, சிறுமியின் தாயை மிரட்டியுள்ளனர்.

ஆனால், அந்தப் பெண் வழக்கைத் திரும்பப் பெற மறுத்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த அந்த 4 பேரும் அப்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில், அந்த பெண்ணின் சகோதரியும் படுகாயம் அடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி, சிறுமியின் தாய் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, குற்றவாளிகளை மீண்டும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Tags : #CRIME #WOMAN #GIRL