‘விளையாட’ சென்ற ‘சிறுமி’ வீடு திரும்பாததால்... ‘பதறிப்போய்’ தேடிய பெற்றோர்... அடுத்த நாள் ‘காலை’ கிடைத்த ‘அதிரவைக்கும்’ தகவல்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி விளையாட வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். எங்கும் அவர் கிடைக்காததால் போலீசாரிடமும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை சித்துராஜபுரம் காட்டுப்பகுதியில் ஒரு சிறுமி காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டு கிடந்துள்ளார். பின்னர் விசாரணையில் அது காணாமல் போன சிறுமிதான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
