'இந்த' வருஷத்தோட இவங்க 5 பேரும்... 'ரிட்டையர்மெண்ட்' அறிவிக்க... எக்கச்சக்க 'வாய்ப்புகள்' இருக்காம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 06, 2020 10:38 PM

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் எவ்வளவு சிறப்பான வீரராக இருந்தாலும் ஒருநாள் அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதே நியதியாக இருக்கிறது. இதற்கு எந்தவொரு வீரரும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இந்த வருடத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புகள் இருக்கும் 5 நட்சத்திர வீரர்களை இங்கே பார்க்கலாம்.

These 5 Indian Players maybe announced retire in 2020

1. எம்.எஸ்.தோனி

கடந்த 1 வருட காலமாக அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். எப்போது வேண்டுமானாலும் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தோனி இதுவரை வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய கேப்டன் என்னும் பெருமை தோனிக்கு உண்டு. உலகக்கோப்பை போட்டிக்குப்பின் ஓய்வு முடிவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாக, ரசிகர்கள் அப்படி எதுவும் நடைபெறக் கூடாது என வேண்டி வருகின்றனர். எனினும் இந்த வருடத்துடன் கூல் கேப்டனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆனால் சென்னை அணியின் கேப்டனாக இன்னும் 2 வருடங்கள் தோனியே தொடர்வார் என்பதால் அவரது ரசிகர்கள் இதை நினைத்து பெரிதாக வருத்தம் கொள்ள மாட்டார்கள் என நம்புவோமாக!

2. முரளி விஜய்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய முரளி விஜய்க்கு இளம்வீரர்களின் வருகையால் அணியில் தற்போது வாய்ப்புகள் கிடைப்பது சற்று கடினமான ஒன்றாக உள்ளது. தற்போது 35 வயதாகும் முரளி விஜய் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி  தொடர் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை சென்னை அணிக்காக முரளி விளையாடி வருகிறார். எனினும் இந்த வருடத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

3. அம்பாதி ராயுடு

கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தேர்வாகாமல் விட்ட கோபம், வருத்தம் ராயுடு மனதில் இன்னும் இருக்கவே செய்கிறது. இவருக்கு பதிலாக விஜய் சங்கரை அணி தேர்வு செய்தபோது தன்னுடைய வருத்தத்தை அவர் வெளிப்படையாகவே காண்பித்தார். தொடர்ந்து ஓய்வு முடிவை அறிவித்த அவர் பின்பு தன்னுடைய முடிவை வாபஸ் பெற்றார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக ஆடிவரும் இந்த 34 வயது வீரருக்கு இனிமேல் அணியில் வாய்ப்புகள் கிடைப்பது சற்று கடினம் தான் என்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த வருடத்தின் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன.

4. யூசுப் பதான்

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான யூசுப் பதான் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற டாப் நாடுகளுக்கு எதிராக சதமடித்து அசத்தியவர். செம பார்மில் இருந்த இவர் 2011 உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வானார். எனினும் அதற்குப்பின் இவருக்கு இந்திய அணியில் அதிகம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே இந்த வருடத்தில் இவர் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இவரின் சகோதரரும் கிரிக்கெட் வீரருமான இர்பான் பதான் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் இதுவரை 417 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற ஹர்பஜன் 2012-க்கு பின் அதிகம் இடம்பெறவில்லை. அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் வருகையால் இந்திய அணியில் இவர் இடம்பெறும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக ஆடிவரும் ஹர்பஜன் படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். இதனால் இந்த வருடத்துடன் இவர் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.