‘பிறந்து 2 நாள் தான் ஆச்சு’... ‘கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல்’... ‘புதரில் குழந்தையை வீசிச் சென்ற கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 23, 2020 06:08 PM

ஓசூரில் பிறந்து இரண்டு நாட்களேயான பச்சிளம் குழந்தையின் பாதி உடல் மட்டும் முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recovery from the Bush of the Baby\'s body in Hosur

ஓசூர் மாநகராட்சி ரிங்ரோடு மத்தம் அக்ரகாரம் பகுதியில் புதர் ஒன்றில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதாக மத்திகிரி காவல்நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவலர்கள், பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆன நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் இருப்பதை பார்த்து அதிர்ந்து போயினர். மேலும் அந்தக் குழந்தையின் உடலை நாய் கடித்து குதறி இருந்ததால் பாதி உடல் மட்டுமே இருந்தது. பச்சிளம் குழந்தையின் மேல்பாதி உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரியாத நிலையில் பெண் குழந்தையாக இருந்து குப்பையில் வீசப்பட்டு நாய் இழுத்து சென்றதா அல்லது இறந்த குழந்தையின் உடல் புதைக்கப்படமால் சாலையோரம் போட்டு சென்றனரா அல்லது தவறான உறவினால் பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் வீசி விட்டு சென்றனரா என்கிற கோணத்தில் மத்திகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BABY #BOY #GIRL