‘நம்பி’ வந்த இளம்பெண்... நண்பர்களுக்கு ‘தகவல்’ கொடுத்து ‘காதலன்’ போட்ட ‘கொடூர’ திட்டம்... ‘அதிர்ச்சி’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் அருகே இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துவரும் இளம்பெண் ஒருவர் உடன் படிக்கும் இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் அமிர்தி பூங்காவிற்கு செல்லலாம் எனக் கூறி அந்தப் பெண்ணை நம்ப வைத்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், இன்னும் சற்று உள்ளே செல்லலாம் எனக் கூறி அவர் அந்தப் பெண்ணை அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவர் தாங்கள் அங்கு செல்வது குறித்து நண்பர்கள் சிலருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து காட்டுப்பகுதிக்குள் சென்றதும், அங்கு ஏற்கெனவே காத்திருந்த நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்துகொண்ட இளைஞர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். காதலனின் செயலைப் பார்த்து அதிர்ந்துபோன அந்தப் பெண் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். அதைக் கேட்டு காட்டுப்பகுதிக்குள் விறகு வெட்டிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் அங்கு வந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரையும் தாக்க முயற்சிக்க, அவர் சத்தம் போட்டு கிராம மக்களை வரவழைத்துள்ளார்.
பின்னர் அங்கு வந்த கிராம மக்கள் அந்தப் பெண்ணை மீட்டு, அந்த கும்பலுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினருக்கு இதுபற்றி தகவல் கொடுத்த கிராம மக்கள், பெற்றோர் வந்ததும் அவர்களிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்துள்ளனர். மேலும் பெண்ணின் பெற்றோருடைய வேண்டுகோளுக்கு இணங்க இளைஞர்கள் மீது புகார் அளிக்காத கிராம மக்கள் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
